“அது அம்மா மருந்தகம் தான்... முதல்வர் மருந்தகம் அல்ல! இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி அறிமுகப்படுத்துகின்றனர்”- நடிகை கெளதமி

 
ச்


திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவேற்காட்டில் மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். 

Actress Gauthami complaint - 6 people arrested | நடிகை கவுதமி புகார் - 6  பேர் கைது

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை கௌதமி, “அதிமுக திட்டங்கள் அனைத்தும் அந்த பெயரில் இருக்கும் போது நிறுத்தி வைத்துவிட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என ஸ்டிக்கர் ஒட்டி அதனை கொண்டு வருகிறார்கள். தற்போது நடப்பது ஸ்டிக்கர் ஆட்சி என்பதை உறுதி செய்கிறார்கள். அது அம்மா மருந்தகம் தான்., முதல்வர் மருந்தகம் அல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் மொழியை வைத்து அதில் அரசியல் செய்து திசை திருப்ப பார்க்கிறீர்கள். எந்த மொழி கொண்டு வந்தாலும் தமிழை, தமிழ் கலாச்சாரத்தை அசைக்க முடியாது. நான் அதிமுகவில் இணைந்ததற்கு காரணம் அதிமுக ஆட்சி தொடர்ந்து அமைய வேண்டும் என இணைந்துள்ளேன். அரசியலில் ஒரு அடி எடுத்து வைப்பது என்பது லேசாக வைக்க முடியாது. எடுத்த உடனே தீர்வை காண முடியாது, உடனடி தீர்ப்பு வந்தால் அது நிலையாக இருக்காது. வளர்ச்சி வேண்டும் என்றால் படிப்படியாக தான் வர வேண்டும்” என தெரிவித்தார்.

 
இந்நிலையில் கூட்டத்தை முடித்து கொண்டு வந்த நடிகை கௌதமியை கண்ட பெண்கள் அவருடன் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர். இதையடுத்து அவரும் பெண்கள் மத்தியில் நின்று பெண்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார். ஒரு கட்டத்தில் பெண்களின் கூட்டம் அதிகமானதையடுத்து கட்டத்தில் சிக்கி கொண்ட நடிகை கௌதமியை அதிமுக நிர்வாகிகள் மீட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.