பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கெளதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கெளதமி மற்றும் தடா பெரியசாமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி, சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாய பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவே தன்னுடைய ரோல் மாடல் என சொல்லிவந்த நடிகை கெளதமி அவருடைய மரணத்துக்கு பின் பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. குறிப்பாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதிலிருந்து கெளதமிக்கு கட்சியில் உரிய மரியாதை இல்லை எனக் கூறப்படுகிறது. கெளதமிக்கு பிறகு கட்சியில் இணைந்த காயத்ரி ரகுராம், நமீதா போன்றவர்களுக்கு இலக்கிய அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் கெளதமி விரக்தியின் உச்சத்திற்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பாஜக கட்சிக் கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

