நடிகை கௌதமியிடம் 9 மணி நேரத்திற்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை விசாரணை

 
கெளதமி கெளதமி

நடிகை கௌதமியிடம் 9 மணி நேரத்திற்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்தது.

Image

தனது சொத்துக்களை தொழிலதிபர் அழகப்பன்  மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்ததாக நடிகை கெளதமி புகார் அளித்தார். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வெளிநாட்டு முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்புகாரின் மீதான விசாரணைக்காக சாட்சி அடிப்படையில் நடிகை கெளதமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை அடிப்படையாக வைத்து நடிகை கௌதமியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை செய்தது. சாட்சியங்கள் என்ற அடிப்படையில் நடிகை கௌதமியிடம் காலை 10 மணி முதல் நடந்த  விசாரணை நிறைவடைந்தது.