"விவசாயம் இல்லாமல் எதுவுமே இல்லை. அவங்க இல்லைனா நமக்கு எப்படி சோறு கிடைக்கும்?" - நடிகை தேவயானி

 
தேவயானி தேவயானி

எவ்வளவுதான் படித்து ஏசி அறையில் அமர்ந்து சம்பாதித்தாலும் கூட விவசாயி விவசாயம் செய்தால் தான் அனைத்து தரப்பினரும் சோறு சாப்பிட முடியும் என நடிகை தேவயானி கூறியுள்ளார்.

தேவயானி மகள் இந்த டாப் ஹீரோவுடன் நடிக்க போகிறாரா..? நேர்காணலில் பகிர்ந்த  ஆசை.! | பொழுதுபோக்கு - News18 தமிழ்


திருவண்ணாமலை வேலூர் புறவழிச் சாலை சேரியந்தல் பகுதியில் எஸ். ஆர். ஜெ. ஃபார்ம் எக்யூப்மென்ட்ஸ் மற்றும் பார்ம்டிராக் டிராக்டர்ஸ் புதிய ஷோரூமை திரைப்பட நடிகை தேவயானி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து டிராக்டர் வாங்கிய உரிமையாளர்களுக்கு சாவியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர். ஜெ. பார்ம் எக்யூப்மென்ட் நிறுவனர் ஜாகிர் ஷா, பொதுமேலாளர் ஆஜாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து மேடையில் பேசிய நடிகை தேவயானி, “விவசாயம் இல்லாமல் ஒன்றுமே இல்லை விவசாயத்தை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது, விவசாயம் பற்றி பேசும்போது கைத்தட்டல் கொடுப்பதற்கு ஏன் கஞ்சத்தனம் செய்தீர்கள்? விவசாயிகளையும், விவசாயத்தையும் கைத்தட்டி உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்த  வேண்டும். விவசாயிகள் இல்லையென்றால் நமக்கு சோறு எப்படி கிடைக்கும்? நாம் எப்படி சாப்பிட முடியும்? இந்த உலகத்தில் எவ்வளவோ வேலை மற்றும் தொழில்கள் உள்ளது. எல்லோரும் ஏசி ரூமில் உட்கார்ந்து சம்பாதித்து வருகின்றனர். பட்டம் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிறாங்க, படிக்கிறாங்க படிச்சுக்கிட்டே இருக்காங்க, என்றாலும் அனைவருக்கும் சோறு போடுவது விவசாயி தான்


லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் மத்தியில் விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு நீங்கள் கைத்தட்டல் கூட கொடுக்க மாட்டீங்களா? விவசாயிகள் விவசாயம் செய்த பொருட்களை மார்க்கட்டுக்கு கொண்டு வருவதற்குள் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். புனிதமான இந்த திருவண்ணாமலை பூமிக்கு அண்ணாமலையார் அருள் இருந்தால் மட்டுமே இங்கு வர முடியும். அவருடைய அருள் எனக்கு இருந்ததால்தான் நான் இங்கே வந்துள்ளேன், நமக்கு சோறு போடுகின்ற விவசாயிகளுக்கு நாம் மேலும் மேலும் உதவி மற்றும் சேவைகளை செய்ய வேண்டும். இப்போதுள்ள விவசாய பூமிகள் அனைத்தும் வீட்டுமனை பிரிவுகளாகவும், கட்டிடங்களாகவும் மாறி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் நாம் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.