நடிகை அதுல்யா வீட்டு பணிப்பெண் கைது!

 
athulya

நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் அதுல்யா ரவி. இவர் கோவை  வடவள்ளி மருதம் பகுதியில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

athulya ravi

இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2000 ரொக்கம் திருடுபோய் உள்ளது . இது தொடர்பாக அதுல்யாவின் தாய் வடவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

arrest

இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தோழி சுபாஷினி உடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை  செல்வி ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.