தன்னார்வலராக பணியாற்ற விருப்பம்- நேரில் வந்து பதிவு செய்த நடிகை அம்பிகா..!
சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பரில் அதிக கனமழை பெய்யும். குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டும் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் விஜயகுமார் நேற்று முன்தினம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ‛‛சென்னை போக்குவரத்து காவல்துறையில், மழை காலத்தில் தன்னார்வலர்களாக இணைய விருப்பமா?'' எனக்கேட்டு அதற்கான லிங்க்கை பகிர்ந்து இருந்தார். இதையடுத்து இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் தன்னார்வலர்களாக அந்த லிங்க் மூலமாக இணைந்தனர்.
Are u willing to join as volunteer in Greater chennai traffic police. join the whatsapp group.
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) October 21, 2025
சென்னை போக்குவரத்து காவல்துறையில், மழைகாலத்தில் தன்னார்வலர்களாக இணைய விருப்பமா? linkhttps://t.co/8gBudTfFQx @ChennaiTraffic #Traffic #chennai #GCTP
இந்த பதிவை பார்த்த நடிகை அம்பிகாவும் தன்னை தன்னார்வலராக இணைக்க முயன்றார். ஆனால் அவரால் சேர முடியவில்லை. இதனால் நடிகை அம்பிகா இன்று காலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனது செல்போன் எண்ணை வழங்கி தன்னார்வலராக சேர்த்து கொள்ளும்படி பதிவு செய்தார்.


