நடிகை தீபா தற்கொலை வழக்கு : நண்பரிடம் இருந்த நடிகையின் ஐபோன் மீட்பு..

 
நடிகை தீபா தற்கொலை வழக்கு : நண்பரிடம் இருந்த நடிகையின் ஐபோன் மீட்பு..


தற்கொலை செய்துகொண்ட  வாய்தா திரைப்பட நடிகை தீபாவின் காணாமல் போன ஐபோனை  காவல்துறையினர்  மீட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து வந்தவர் தீபா என்கிற பவுலின் ஜெசிகா..  இவர் அண்மையில் வெளியான வாய்தா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் விஷாலின் துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.  சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தீபா, கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டில் , துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  உறவினர்கள் அவரை தொலிபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் நேரில் சென்று பார்த்தபோது, தீபா வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.  

நடிகை தீபா தற்கொலை வழக்கு : நண்பரிடம் இருந்த நடிகையின் ஐபோன் மீட்பு..

 அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காதல் கைகூடவில்லை என்பதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் தீபா பவுலின் தற்கொலை செய்து கொண்டதை, முதல் ஆளாக கதவை உடைத்துப்பார்த்த பிரபாகரனிடமிருந்து  அவரது ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.   மேலும்,  நடிகை  தீபா பவுலின் பயன்படுத்திய மூன்று செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன்  மீட்கப்பட்ட  ஐபோனில்  மெசேஸ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதேனும்  டெலிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய   தடயவியல் துறையின் ஆய்வுக்கு  அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை தீபா தற்கொலை வழக்கு : நண்பரிடம் இருந்த நடிகையின் ஐபோன் மீட்பு..

 பிரபாகரனிடம்  கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு மேலாக  போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், காதலன் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக பிரபாகரன் கூறியிருக்கிறார்.  மேலும்,  தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதினிடம் பவுலின் தீபா வாக்குவாதம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக பவுலின் தீபா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  கைப்பற்றப்பட்டுள்ள மூன்று செல்போன்கள் மற்றும் டேப்-இல் உள்ள விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கோயம்பேடு போலீஸார் தெரிவித்துள்ளனர்.