"தேவை ஒரு அரசாங்கம்தான்.. ஆளுநர் ஆட்சியல்ல"- விஷால்

 
"தேவை ஒரு அரசாங்கம்தான்.. ஆளுநர் ஆட்சியல்ல"- விஷால்

தளபதி விஜய் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க தமிழக ஆளுநர் ஏன் தயக்கம் காட்டுகிறார்? என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரின் ஆதரவுடன் 113 சட்டமன்ற உறுப்பினர்களாக இது உயர்ந்திருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு தனிப் பெரும்பான்மையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என்பதற்கு இன்னும் ஐந்து பேரின் ஆதரவு தான் வேண்டும். இந்த சூழலில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை எனக் கூறி, விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. காலம்தாழ்த்திவருகிறார்.


இந்நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில், “தளபதி விஜய் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க தமிழக ஆளுநர் ஏன் தயக்கம் காட்டுகிறார்? மக்கள் தீர்ப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது? 233 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டிய நிலையில், தவெகவுக்கு பெரும்பான்மை ஆதரவளித்து மக்கள் தீர்ப்பளித்த நிலையில், நமக்கு தேவை ஒரு அரசாங்கம்தான். ஆளுநர் ஆட்சியல்ல. அன்பிற்குரிய விஜய் நீங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும். நிச்சயம் அமைப்பீர்கள். ஒரு வாக்காளனாக அதை உறுதிப்படுத்த நான் முன்நிற்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.