விஷால் ஃபிலிம் பாக்டரி ஹரிகிருஷ்ணன் நீக்கம்

 
vishal vishal

விஷால் ஃபிலிம் பாக்டரி ஹரிகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். யாரும் அவரை எதற்காகவும் தொடர்பு கொள்ள கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Image

இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புடையீர் வணக்கம், நான் இக்கடிததிதின் வாயிலாக தங்களுக்கு அனைவருக்கும் தெரிவிப்பது, திரு.வ.ஹரிகிருஷ்ணன் அவர்கள் எனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம், தேவி சமூக சேவை அறக்கட்டளை மற்றும் நமது விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் திறனிலும் தொடர்புடையவர் அல்ல என்பதை பொதுமக்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் திரு.வ.ஹரிகிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளவோ அல்லது கையாளவோ வேண்டாம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்கள் ஏதேனும் இருந்தால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.