“மருந்துகளை விட COME BACK.. GET WEL SOON என்ற உங்கள் வேண்டுதலே என்னை குணமாக்குச்சு”- விஷால்

 
“மருந்துகளை விட COME BACK.. GET WEL SOON என்ற உங்கள் வேண்டுதலே என்னை குணமாக்குச்சு”- விஷால்

உங்க அன்புக்கெல்லாம் நான் கடமைப்பட்டிருக்கேன். அடிமையா இருக்கேன் என மத கஜ ராஜா பட பிரீமியர் காட்சியில் நடிகர் விஷால் உரையாற்றினார்.

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது திரைப்படம் மதகஜராஜா. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.


மத கஜ ராஜா பட பிரீமியர் காட்சியை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “காய்ச்சல் குணமாக வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. உயிர் உள்ளவரை  உங்கள் அன்பை மறக்க மாட்டேன். மருந்துகளை விட COME BACK.. GET WEL SOON என நீங்கள் செய்த வேண்டுதல்கள்தான் என்னை குணமாக்குச்சு. இவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கலை இப்போ நல்லா இருக்கேன். நான் மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை. இந்த படம் வரும் வரும்னு ஒவ்வொரு வருஷமும் காத்திருந்தோம், ஆனா 12 வருஷம் கழிச்சு இப்போ ரிலீஸ் ஆகுது. நிறைய பேர் இவர் 3 மாதம், 6 மாதம் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்று கூறினர். இப்போது அந்தமாதிரி எந்த நடுக்கமும் இல்லை. eyes மைக் சரியாகதான் இருக்கிறது. எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். சாகும்வரை உங்கள் அன்பை நான் மறக்க மாட்டேன்”” என்றார்.