குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ- வனத்துறை எடுத்த முடிவு
லார் கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டு சர்ச்சையான விவகாரத்தில் ஈரோடு பெருந்துறையில் உள்ள குரங்கின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. நடிகர் விக்ரம், அரியவகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அக்கரையில் உள்ள மு.க.முத்து வீட்டில் வனத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் லார் கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டு சர்ச்சையான விவகாரத்தில் ஈரோடு பெருந்துறையில் உள்ள குரங்கின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையாளர் கேசவநாதனுக்கு சொந்தமான இடத்தில் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு விசாரணை நடத்திவருகிறது. 3 குரங்குகளை வாங்கியது குறித்து வனத் துறையிடம் உரிமையாளர் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. லார் கிப்பான் குரங்குகளை வாங்கினால், 15 நாட்களுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.

