"சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடிங்க"... இளமையின் ரகசியத்தை உடைத்த நடிகர் விக்ரம்

 
இளமையின் ரகசியத்தை வெளிப்படுத்திய நடிகர் விக்ரம்

கழுதை பால் குடிங்க, இளமையுடன் இருக்கலாம் என நடிகர் விக்ரம் கலகலப்பாக உரையாற்றினார். 

வீர தீர சூரன் திரைப்பட இயக்குனர் அருண்குமாருடன் நடிகர் விக்ரம், ஈரோட்டில், சக்தி சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் படம் குறித்தும், காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகள் குறித்தும் ரசிகர்களுடன் உரையாடினார். மது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர் தவிர்த்துள்ளார். அது வரவேற்கத்தக்கதாக உள்ளது என்றார். பின்னர் நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். 

வயசாகாமல் இருக்க என்ன செய்றீங்க..? நீங்க மட்டும் இளமையாக இருக்கீங்க..? என ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த விக்ரம், "கழுதை பால் குடிங்க, சனிக்கிழமை தோறும் குடித்து வந்தால் இளமையாக இருப்பீர்கள்” என பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம், படத்திற்கான வரவேற்பு நன்றாக உள்ளது, இந்த படம் புதுவிதமான முயற்சி என மக்கள் கருதுவதாக கூறினார்.