குரங்கால் சிக்கலில் மாட்டிய நடிகர் விக்ரம்
குட்டி குரங்கு ஒன்றால் நடிகர் விக்ரமும் அவரது சம்மந்தி சி.கே. ரங்கநாதனும் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சியான் விக்ரம் ஒரு குட்டிக் குரங்குடன் ஜாலியாக விளையாடும் மற்றும் அதுபோல் பாவனைகள் செய்யும் வீடியோ ஒன்றை அண்மையில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குரங்கு விக்ரமின் முடியைப் பிடித்துக்கொண்டு சேட்டை செய்வது மற்றும் விக்ரம் அதனுடன் கொஞ்சி மகிழும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்தக் குரங்கு இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட லார் கிப்பன் இனத்தைச் சேர்ந்தது. இதை செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமாகும். இது தென்கிழக்கு ஆசியாவிலிருந்து மணிப்பூர், ஈரோடு வழியாக சென்னையில் உள்ள நடிகர் விக்ரமின் சம்மந்தியான CavinKare நிறுவனத்தின் நிறுவனரான சி.கே. ரங்கநாதன் வீட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. விக்ரமின் வீடியோ வைரலானதை தொடர்ந்து தமிழக வனவிலங்குத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து நடிகர் விக்ரம் குரங்குடன் விளையாடும் இன்ஸ்டா பதிவை நீக்கிவிட்டார்.

