“நடிகர் விஜயை கைது செய்ய வேண்டும்”- மாணவர் சங்கத்தின் போஸ்டரால் பரபரப்பு

 
ச்

கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சாரப் பரப்புரையில் அப்பாவி மக்கள் உயிர் பலி வாங்கி தப்பி ஓடிய விஜயை கொலை குற்றவாளி என கைது செய் என தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் குளித்தலை பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Posters featuring Tamil Nadu Maanavargal Sangam with text in Tamil. Multiple posters show individuals raising hands, with names like U. Rajendran, M.S. Jeyapal, and K. Senthil visible. The text includes "Tamil Nadu Maanavargal Sangam" and "39 Aapavai Urimaiyai Vendum" repeated across posters.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி மாலை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரப் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்டநெரிசலில் சிக்கி மக்கள் பலியான போதே அங்கிருந்து தவெக தலைவர் விஜய் சென்றுவிட்டார்.

இந்நிலையில் இன்று குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தமிழ்நாடு மாணவர்கள் சங்கத்தினர் கரூரில் அப்பாவி மக்களின் உயிர்களை பழிவாங்கி தப்பி ஓடிய விஜய் கொலை குற்றவாளி என கைது செய்யக்கோரி போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். விஜய் கைது செய்யக்கோரி தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் போஸ்டர் ஒட்டியதால் குளித்தலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Image

இந்நிலையில் இதுபோன்ற போஸ்டரை நாங்கள் தரவில்லை என விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மாணவர்கள் சங்க தலைவர், “இன்றைய தினம் பல செய்திகளிலும் ஊடகங்களிலும் தவறான செய்தி பரப்பபடுகிறது கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜயை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மென்று எந்த அறிக்கையயும் போஸ்டரையும் துண்டுபிரசுரங்களையும் தமிழ்நாடு மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடவோ ஒட்டவோ இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் பல மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டி தமிழ்நாடு மாணவர்கள் சங்கத்தின் மீது அவதூர்களை பரப்புவர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு பொறுப்பாளாராக தவெக தலைவர் விஜய் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே தமிழ்நாடு மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிப்பு செய்தோம் தமிழ்நாடு மாணவர்கள் சங்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவர்கள் மீது வரக்கூடிய காலங்களில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.