நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்

 
நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்

நடிகர் விஜய் சேதுபதிக்கு சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமை குறித்து நடிகர் விஜய் சேதுபதி வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகையிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து எம்.எல்.ஏ.சுகுமார் கூறுகையில், “முதல்வர் விஜயை பற்றி பேச விஜய் சேதுபதிக்கு எந்த தகுதியும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்துக்காக விஜய் சேதுபதி இவ்வாறு பேசுகிறார்.ஏனெனில் இப்போது யாருமே நாடகங்களையோ, பிக்பாஸ் நிகழ்ச்சியையோ பார்ப்பதில்லை. அனைவருமே சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கின்றனர். மார்க்கெட் சரிந்ததால் நடிகர் விஜய்சேதுபதி முதல்வர் விஜய் குறித்து பேசினார்” என்றார்.