மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகர் விஜய்?

 
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகர் விஜய்?

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான நடிகர் விஜய் தற்போது சினிமாவை கடந்து அரசியல் ரீதியான பல்வேறு நுழைவுகளை முன்னெடுத்துவருகிறார். குறிப்பாக தான் நடித்து வெளியான திரைப்படங்கள் தொடர்பான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மேடைகளில் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக பேசிகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அம்பேத்கருடைய பிறந்த நாளன்று தமிழக முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சென்று அம்பேத்கருடைய சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பேரணியாக சென்று அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த நடவடிக்கை என்பது நடிகர் விஜய் அரசியல் ரீதியான நுழைவை அறிவிக்கும் வகையிலாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வை தொடர்ந்து நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் பல்வேறு கட்டமாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழக முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உடைய விவரங்கள் சேகரிக்கபட்டுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘2024 பாராளுமன்றமே  என்ற வாசகங்களுடன் விரைவில் மதுரையில் மாநாடு’ என்று மதுரை முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சரா்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.