நடிகர் விஜய், தவெக தலைவர் விஜய்யாக மாறிய ஆவணப்படம் வெளியீடு!

 
vijay

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவண படம், தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது. 

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது.  2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து விஜய் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். 

இந்த தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவண படம் வெளியிடப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சி மேடைக்கு வருகை வந்த விஜய், புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்புக்கு எதிராக போராட உறுதியேற்போம் என பேனரில் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார்