வடிவேலு தாயார் மறைவு - ஓபிஎஸ், தினகரன் இரங்கல்

 
tn

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


tn

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு . இவரது தாயார் சரோஜினி  மதுரை வீரகனூரில் வசித்து வந்த நிலையில்  உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார் . வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி நேரில் சென்று வடிவேலுவின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்களின் அன்புத் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , "திரைப்பட நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி.சரோஜினி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தாயை இழந்துவாடும் திரு.வடிவேலு அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.