துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் வடிவேலு!
மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏற்கனவே அமைச்சர்வையில் இருந்த 3 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு புதிதாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், திரைக்கலைஞர்கள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் வடிவேலு , மதுரையில் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து , பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இருவரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் தந்தை , மகனாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.