“யூடியூபர்களை தூங்கவிடாமல் நெருக்கடி கொடுக்கணும்”- நடிகர் வடிவேலு பரபரப்பு
நடிகர்கள், திரைப்படங்கள் பற்றி அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடவடிக்கை தேவை என நடிகர் வடிவேலு வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சினிமா நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு புகார் கூறினார். மேலும், 10 பேர் சேர்ந்து சினிமாவை அழித்துவருகிறார்கள் எனக் கூறிய அவர், சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதூறு செய்வோருக்கு சிலர் உடந்தையாக உள்ளனர் என்றும், காசு கொடுத்து படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள் என்றும் வடிவேலு கோரிக்கைவிடுத்தார். அவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த வடிவேலு, அவதூறு பரப்புவோரை தூங்கவிடாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டர். அதற்கு நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ், அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் எச்சரித்தார்.


