“குழந்தைகள் குமுறுகிறார்கள்! ஆளுநர் விஜய்யை அழைக்க வேண்டும்”- தம்பி ராமையா
அடுத்த எம்.ஜி.ஆர், விஜயை ஆளுநர் உடனடியாக அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என நடிகர் தம்பி ராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் தம்பி ராமையா வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆளுநர் ஐயா அவர்களே.. அறியாமை, ஓட்டுரிமையில்லாத குழந்தைகளின் பார்வையில் இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த எம்.ஜி.ஆர். ஆகி விட்ட விஜய்யை ஆட்சி அமைக்க அழையுங்கள். அடுத்த எம் ஜி ஆர் விஜயை ஆளுநர் உடனடியாக அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.இதனை குடும்பங்களில் உள்ள குழந்தைகள் சார்பா கேட்குறேன். அடுத்த MGR விஜய் தான்.. 2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 40% வாக்குகள் விஜய்க்கு கிடைத்துள்ளது. விஜய் எப்போது பதவியேற்பார் என குழந்தைகள் குமுறுகிறார்கள். புதுச்சேரியில் உள்ள அதிமுக MLAக்கள் புரிந்து கொள்ள வேண்டும், நீங்களாக வந்து விஜய்க்கு ஆதரவு கொடுங்கள். எல்லாரும் மன சஞ்சலத்தில் இருக்கிறார்கள். 108 சீட் இருக்குல்ல... அர்லேக்கர் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் விஜய்யை அழையுங்கள். அவர் கேட்ட 2 வாரம் அவகாசம் கொடுங்க. அவரால நிரூபிக்க முடியலைன்னா மீண்டும் தேர்தல் வைங்க! ” எனக் கூறியுள்ளார்.

