மாணவன் சின்னத்துரை கூறிய பதில் - வீட்டிற்கே சென்று வாழ்த்திய பிரபல நடிகர்

 
tn

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் சின்னதுரை சக மாணவர்களால் சாதி வன்கொடுமை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டார். மாணவன் சின்ன துறையை வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

tn

இந்த சூழலில் மாணவர் சின்னதுரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 469 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாணவர் சின்னத்துரை தான் சிஏ படிக்க விரும்புவதாக தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர்,  சாதிய ரீதியாக தங்களை தாக்கியவர்களுக்கு நீங்கள் தரும் பதில் என்ன என்று கேள்விக்கு,  அவங்களும் நல்லா படிச்சு முன்னேறனும். ஒற்றுமையாய் இருக்கணும் என்று அவர் தெரிவித்தார். மாணவர் சின்ன துரையின் இந்த பதில் அவரை பலரது பாராட்டுக்கு உரித்தாக்கியது. 


இந்த நிலையில் மாணவர் சின்னதுரையை நேரில் சந்தித்து நடிகர் தாடி பாலாஜி வாழ்த்து கூறியுள்ளார்.  நெல்லையில் உள்ள சின்னதுரை வீட்டுக்கு நேரில் சென்று அவர் புதிய ஆடையை பரிசாக வழங்கி , எந்த உதவி வேண்டுமானாலும் கேள் செய்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.  மாணவர் சின்னதுரை செய்தியாளர்களிடம் அளித்த பதிலே அவரை பார்க்க தன்னை தூண்டியதாக நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.