தவெகவில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் நடிகர் தாடி பாலாஜி

 
அ அ

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் நடிகர் தாடி பாலாஜி.

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி புதுச்சேரியில் இன்று லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்து கொண்டார். அவருடன் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்கள் லியோகுமார், சுனில்குமார், குமரன் மற்றும் சிவராமன் ஆகியோரும் இணைந்தனர்.