ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் - நடிகர் எஸ்.வி.சேகர்..!!
Jan 15, 2026, 08:18 IST1768445287207
நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகவிட்டது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரசிகர் மன்றத்தை ரசிகர் மன்றமாக நடத்த வேண்டும். இதேபோல் அரசியல் கட்சியையும், அரசியல் கட்சியாக நடத்த வேண்டும். பா.ஜனதா மாநில கட்சிகளை அடக்கி ஆள முயற்சி செய்து வருகிறது.
அரசியலில் விஜய் வெற்றி பெறுவது கடினம். சி.பி.ஐ. விசாரணைக்கு உடனே சென்ற விஜய், கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவிக்கவில்லையே. வருகிற சட்டமன்ற தேர்தலில் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிட்டால் வெற்றிபெறுவாரா? என்பது தெரியாது.
தமிழ்நாட்டில் 5 லட்சம் பிராமணர்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களுக்கு நல வாரியம் அமைத்து கொடுத்தால் நான் 3 லட்சம் வாக்குகளை பெற்றுத்தருவேன். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறாது. தேர்தல் முடிந்த பின்னர் ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.


