அந்த அறிக்கை என்னுடையது அல்ல! பதறும் சூர்யா

 
bala - surya movie

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருப்பதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்திருப்பத்போன்று ஒரு போலி அறிக்கை சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும், இதற்கு நடிகை சூர்யாவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என அவரது மேனேஜர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். 

சூர்யா

நடிகர் சூர்யா பெயரில் பரவிவரும் போலி அறிக்கையில், “ இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளா உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்து கொள்கிறேன்.

சூர்யா

4000 மருத்துவக் கல்வி இடங்கள் இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்தப்பதிவுச் சுட்டெண், தேசிய மற்றும் மாநில சராசரிகளை விட அதிகமாகும். எனவே இந்த தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்பது எனது நம்பிக்கை. 

சமூக நீதிப்பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடைபோடட்டும்; நாமும் உடன் உடன் நிற்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.