எங்களுடன் துணை நின்றதற்கு மனமார்ந்த நன்றி- சூர்யா

 
surya

நடிகர் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த உண்மைக் கதை என்று ஜெய்பீம் திரைப்படம் அண்மையில் ஓடிடி இணையத்தில் வெளியிடப்பட்டது.

Jai Bhim (2021) - IMDb

இந்த திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்தின் உண்மைப் பெயரை மாற்றி   மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியின் வீட்டில் தங்கள் குலத்தின் அடையாளமாக அக்னிகுண்டம் காட்டப்பட்டு உள்ளதாகவும் குறவர் இனத்திற்குப் பதிலாக இருளர் என காட்சிப்படுத்தப்பட்டு,ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் நடிகர் சூர்யாவுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, ஒரு பக்கம் எதிர்ப்புகள் வலுத்தாலும், ஒரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவும் பெருகிவருகிறது


இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெய் பீம் மீதான உங்கள் அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிகை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.எங்களுடன் துணை நின்றதற்கு மனமார்ந்த நன்றி” எனக் கூறினார்.