"இதயம் உடையும் அளவுக்கு வேதனை தருகிறது”- நடிகர் சூர்யா

 
ச்

இதயம் உடையும் அளவுக்கு வேதனை தருகிறது. ஒரு முழு குழுவின் உழைப்பும், அர்ப்பணிப்பும் இவ்வாறு வீணாகிறது என்பது மிகுந்த அநியாயம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன்" திரைப்படம் லீக் - தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம்.


ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைமில் படக்குழு தரப்பில் புகார் அளித்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் மட்டுமே முதலில் கசிந்த நிலையில், நேற்று இரவு முழு படத்தையும் சட்டவிரோதமாக  சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர். முதலில் ஓரிரு காட்சிகள் மட்டும் வெளியான நிலையில், இரவு முழு திரைப்படமும் வெளியானது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு வேதனை தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, “இதயம் உடையும் அளவுக்கு வேதனை தருகிறது. ஒரு முழு குழுவின் உழைப்பும், அர்ப்பணிப்பும் இவ்வாறு வீணாகிறது என்பது மிகுந்த அநியாயம். தயவு செய்து இந்த படத்தை இங்கு பார்க்கவும், பகிரவும், பேசவும் வேண்டாம். அவர்களின் உழைப்பை மதியுங்கள். என் நண்பர்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்; இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது! #JanaNayaga ” எனக் குறிப்பிட்டுள்ளார்.