நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் கைது..!
Sep 24, 2025, 04:50 IST1758669623000
நடிகர் சூர்யா வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பெண் உட்பட நான்கு பேர் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த சுலோச்சனா, அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகியோர், ரூ.5,500 கட்டினால் மாதம் ஒரு கிராம் தங்கக்காசு வழங்குவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்ததாக மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கும்பல், குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.2.5 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

