ரூ.4.72 லட்சத்துக்கு போதைப்பொருள் வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

 
srikanth srikanth

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image

அதிமுக ஐடி விங்-ல் பணியாற்றிய பிரசாத் என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்த விசாரணையில் அவர் வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் வாங்கி அதை பலருக்கும் விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதை நடிகர் ஸ்ரீகாந்துக்கு வழங்கியதாக வாக்குமூலம் அளித்தார். நடிகர் ஸ்ரீகாந்திருக்கு கொக்கேன் உள்ளிட்ட போதைப் பொருட்களை வழங்கியதாக போலீஸில் வாக்குமூலம் அளித்ததையடுத்து, ஸ்ரீகாந்தை போலீசார் ரகசியமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப் குமாரிடம் 40 முறை கொக்கைன் போதைப்பொருள் வாங்கி உள்ளதாகவும், ரூ.4,72,000 பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைன் ரூ.12,000க்கு வாங்கியுள்ளார்.