போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்..
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஐடி விங்-ல் பணியாற்றிய பிரசாத் என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்த விசாரணையில் அவர் வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் வாங்கி அதை பலருக்கும் விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதை நடிகர் ஸ்ரீகாந்துக்கு வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்திருக்கு கொக்கேன் உள்ளிட்ட போதைப் பொருட்களை வழங்கியதாக போலீஸில் வாக்குமூலம் அளித்ததையடுத்து, ஸ்ரீகாந்தை போலீசார் ரகசியமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக எழுந்த குற்றம் சாட்டின் அடிப்படையில் , தற்போது போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ஸ்ரீகாந்துக்கு சம்மன் கொடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால், அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரதீப் குமார் என்பவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


