“விஜய் சார் ஒரு குழந்தை”- நடிகர் சூரி
வேலாயுதம் படப்பிடிப்பின்போது நான் என் முதல் காரை வாங்கினேன். அதை விஜய் அண்ணாவிடம் கொடுத்து ஓட்டிப் பார்க்க சொன்னேன். அவரும் உடனே காரை ஓட்டிப் பார்த்தார் என நடிகர் சூரி கூறியுள்ளார்.
நடிகர் சூரி சமீபத்திய பேட்டி, “வேலாயுதம் படப்பிடிப்பின்போது நான் என் முதல் காரை வாங்கினேன். அதை விஜய் அண்ணாவிடம் கொடுத்து ஓட்டிப் பார்க்க சொன்னேன். அவரும் உடனே காரை ஓட்டிப் பார்த்தார். அவர் ஒரு அசாதாரணமான மனிதர், அவர் படப்பிடிப்புத் தளத்தில் சிரிக்கும்போது, எங்களுக்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். இவ்வளவு பெரிய நட்சத்திரத்துடன் நடிக்கும்போது இயல்பாகவே ஒருவித பதற்றம் இருக்கும். ஆனால் விஜய் அண்ணாவுடன் பணிபுரியும்போது, அந்தப் பயம் இல்லை.
நான் 'ஜில்லா' படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் என்னை ஊசியால் குத்தும் ஒரு சிறிய காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். அவன் என்னைக் குத்தியபோது, நான் ஒரு குறிப்பிட்ட எதிர்வினையைக் காட்டினேன். அதனை பார்த்து விஜய் குபீரென சிரித்தார். அதன்பின் "மன்னிக்கவும், மன்னிக்கவும்" என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்திலிருந்து நகர்ந்தார். விஜய் சார் ஒரு குழந்தை. நாம் நகைச்சுவை செய்தால் அவர் அவ்வளவு குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்” என்றார்.

