முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

 
விஜய் சிவகார்த்திகேயன்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி.ஜோசப் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அவர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Image


இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில், “இதயங்களை மகிழ்விப்பதில் இருந்து மாநிலத்தை வழிநடத்துவது வரை... சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. நமது தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்தது பெருமையாக உள்ளது. ரசிகன் எக்ஸ்பிரஸ், விஜய் அவார்ட்ஸ், GOAT திரைப்படத்தில் இணைந்து நடித்தது என உங்களுடனான ஒவ்வொரு தருணமும் எனக்கு எப்போதும் சிறப்பானதாக இருக்கும். இந்த சகோதரத்துவமும், பந்தமும் தொடரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.