நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 'உழவர்களின் தோழன்' விருது!!

 
tt

திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு "உழவர்களின் தோழன் விருது வழங்கப்பட்டது.

gggg

திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவருக்கு உழவர்களின் தோழன் என்ற விருது வழங்கப்பட்டது.அப்போது விழாவில் பேசிய அவர், நான் இது போன்ற பல விழாக்களின் மேடைக்கு கீழே நின்று வேடிக்கை பார்த்தவன் தான்.  அது போன்ற ஒருவனை  இந்த மேடையில் நிறுத்தி வைத்து விருது அளித்திருக்கிறீர்கள். இந்த விருதை இங்கு கொடுத்ததற்கு மிக மிக மகிழ்ச்சி. அதைத் தாண்டி சில விருதுகள் மகிழ்ச்சியை கொடுக்கும் , சில விருதுகள் சந்தோஷத்தை கொடுக்கும் , சில விருதுகள் உங்களுக்கு புகழை கொடுக்கும்,  ஆனால் சில விருதுகள் மட்டும் தான் உங்களுக்கு பெருமையை கொடுக்கும்.

tt

அப்படிப்பட்ட விருதாக தான் நான் இதை பார்க்கிறேன்.  இதற்கு நான் எவ்வளவு தகுதியானவன் என்று தெரியவில்லை விவசாயி என்பவன் தன்னை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்காக இருப்பவன்.  அந்த வார்த்தையை மிகவும் பவர்ஃபுல்லானது. அதன் அந்த உழவர்களின் தோழன் என்பது மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன். என்னால் முடிந்ததை நான் கடைசிவரை செய்து கொண்டிருப்பேன் என்றார்.