நடிகர் சிவாஜியின் மகள் காலமானார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகளும் நடிகர் பிரபு, ராம்குமார் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி காலமானார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரின் சகோதரியான சாந்தி, இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாந்தி நாராயணசாமி திரைப்படத் தயாரிப்பாளராக அறியப்பட்டவர்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் - கமலா தம்பதியரின் மூத்த மகள் ஆவார். இவருக்கு ராம்குமார், பிரபு என்ற இரு தம்பிகளும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவருடைய கணவர் பெயர் நாராயணசாமி, மற்றும் இவர்களது மகள் சத்தியலட்சுமி ஆவார். சிவாஜி கணேசன் தங்களுக்குப் பிறந்த முதல் பெண் குழந்தை என்ற பாசத்தின் காரணமாக, சென்னை அண்ணா சாலையில் தான் பிரம்மாண்டமாகக் கட்டிய திரையரங்கிற்கு இவரது நினைவாக 'சாந்தி தியேட்டர்' என்று பெயரிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

