மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ...! தவறான தகவல்களை பரப்பாதீர்கள் - குடும்பத்தினர் வேண்டுகோள்

 
shree shree

நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார், அவர் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக நடிகர் ஸ்ரீ-யின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். அவர் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதால் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கிறார். நடிகர் ஸ்ரீ தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதை தனி நபர்களும் ஊடகங்களும் நிறுத்த வேண்டும். ஸ்ரீ நலமுடன் இருப்பதாக அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். 

அவரது தனியுரிமை தேவையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சில ஊடகங்களில் ஸ்ரீ குறித்த நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.