"எனது மகள் திவ்யா பற்றி பரவி வருகின்ற வதந்திகளில் எதுவும் உண்மையல்ல.." - நடிகர் சத்யராஜ் அறிக்கை
என் மகள் திவ்யா குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. அந்த வதந்திகள் உண்மையில்லை என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில், திவ்யா சத்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா சத்யராஜுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே, சத்யராஜின் உடன் பிறந்த சகோதரி கல்பனாவின் மகன் மகேந்திரனுடன் திருமணம் நடந்ததாகவும் திருமணமான அடுத்த 5 நிமிடத்திலேயே திவ்யா தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசிவிட்டு சென்றுவிட்டார் என்றும் கூறியது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளானது.
இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மகள் திவ்யா குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. அந்த வதந்திகளில் எதுவும் உண்மையல்ல, என் மகள் கடின உழைப்பாளி, கண்ணியமானவர் மற்றும் திறமையால் சுயமாக முன்னேறிய பெண்மணி. என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமையடைகிறேன்” எனக் குரிப்பிட்டுள்ளார்.

