விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் இழப்பு: சரத்குமார்

 
சரத்குமார்

கேப்டன் விஜயகாந்த்துக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வ ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். தினமும் ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்த்துக்கு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றிய சரத்குமார், “இப்படி ஒரு நினைவேந்தல் கூட்டத்தில் நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் இழப்பு. 1990-களில் நான் சரிவை சந்தித்து கொண்டு இருந்த காலங்களில் விஜயகாந்த்-யின் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதற்காக மீசை எடுத்தேன். தற்போதும் மீசை எடுத்துள்ளேன் ஆனால் இப்படி ஒரு நிகழ்வு. வெளியூரில் சிக்கி இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை மிகவும் வருந்தினேன். வடிவேலு வராமல் வீட்டில் இருந்து அழுதிருக்களாம். கேப்டன் விஜயகாந்த் யாரையும் எதிர்த்து குறை கூறும் நபர் இல்லை” எனக் கூறினார்.