#JUSTIN நடிகர் சாம் நீல் காலமானார்
ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் நடித்த சாம் நீல் 78 வயதில் காலமானார்.

'ஜுராசிக் பார்க்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் சர் சாம் நீல், தனது 78-வது வயதில் காலமானார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிகழ்ந்த அவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். வட அயர்லாந்தில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்த சர் சாம், 'தி பியானோ' மற்றும் 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளர்.
2023-ல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட சாம் நீல், 2026 ஏப்ரலில் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக அறிவித்திருந்தார். ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ஜுராசிக் பார்க் மற்றும் பீக்கி பிளைண்டர்ஸ் தொடரின் மூலம் சாம் நீல் உலகம் முழுவதும் புகழ்பெற்றார்.

