இறுதி ஊர்வலத்தில் நடனம் குறித்து நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பேட்டி..!

 
1 1

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் திருவுருவப்படத்தை அவரது மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, மருமகன் கார்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி சந்தோஷமாகத் தந்தையை வழியனுப்பி வைத்தாகக் கூறினார்.அம்மா ஒரு டான்ஸர். அதனால் தன் அன்பை டான்ஸ் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் என் அப்பா இறக்க பல காரணம் சொல்கிறார்கள். அவர் இறந்த சோகத்தில் இருந்தே நாங்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அதனால் அது பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார் இந்திரஜா.

தனது பெற்றோர் காதல் ஜோடியாக வாழ்ந்து குடும்பத்தை அன்பாக நடத்தி வந்ததாகவும், அவர்களைப் பார்த்துதான் தாமும் அன்பான முறையில் குடும்பத்தை வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது எனவும் இந்திரஜா கூறினார்.