நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

 
tn

நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் இன்று காலமானார் . அவருக்கு வயது 70 

tn

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் ஜூனியர் பாலையா. 1975ம் ஆண்டு 'மேல்நாட்டு மருமகள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை , தனி ஒருவன் , புலி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

tn

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில்  அவர்  உயிர் பிரிந்தது. ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.