பிரபல நடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்..!

 
1

80களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் ராமராஜன். இவர் தற்போது ‘சாமானியன்’ என்றப் படத்தின் மூலமாக சினிமாவுக்கு கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில்தான், அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) நேற்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். செய்தி அறிந்ததும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ராமராஜன் மேலூர் விரைந்தார்.

இவரது மறைவுக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.