ஜனநாயகனுக்காக வாய்த் திறந்த ரஜினிகாந்த்!

 
rajinikanth

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தீவிரவாத செயல் கண்டிக்கத்தக்கது; கடும் தண்டனை வழங்க வேண்டும்- ரஜினிகாந்த்

நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் இன்று காலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் கசிந்தது. ஜனநாயகன் படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஜனநாயகனுக்காக குரல் கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.