'யாருக்காக அழுதான்' என்ற புத்தகத்தைப் பிடித்து 3 நிமிடங்கள் அழுதேன் - ரஜினிகாந்த்
'யாருக்காக அழுதான்' என்ற புத்தகத்தைப் பிடித்து 3 நிமிடங்கள் அழுதேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் 'வேள்பாரி' 100000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்த வெற்றிப் பெருவிழாவில் 'வேள்பாரி 100000' வெற்றிச் சின்னத்தைத் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். வேள்பாரி நூல் சீனிமா வடிவம் எப்போது வரும் என அனைவரையும் போல நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். வேள்பாரி நூல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையாவதை கேள்விப்பட்டு வியப்படைந்தேன். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியதில் முக்கிய பங்காற்றிய 3 இயக்குநர்கள் உள்ளனர். பாரதிராஜா, மணி ரத்னம், இன்னொருவர் சங்கர். அவரின் வேள்பாரி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ஜெயகாந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். 'யாருக்காக அழுதான்' புத்தகத்தில் ஜெயகாந்தனின் எழுத்து வியப்பை அளித்தது. 'யாருக்காக அழுதான்' என்ற புத்தகத்தைப் பிடித்து 3 நிமிடங்கள் அழுதேன். ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்துள்ளேன். ஓய்வுக்குப் பிறகு புத்தகங்களை படிக்க விருப்பப்படுகிறேன். கல்கிக்குப் பிறகு சிறந்த எழுத்தாகத் தோன்றியது வேள்பாரி. கல்கியை என்னால் பார்க்க முடியவில்லை. நம்ம காலத்து கல்கி சு.வெங்கடேசன். விகடன் சில நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பார்கள். நான் போக மாட்டேன். உடனே என்னை கிழி கிழினு அவங்க பத்திரிகைல கிழிப்பாங்க. ஆனாலும் எங்கள் நட்பு தொடர்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்னால “ஓல்டு ஸ்டூடண்ட்ட சமாளிப்பது ரொம்ப கஷ்டம்ன்னு” சொல்லி பேசி பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்” எனக் கூறினார்.


