“தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாதது”- ரஜினிகாந்த்
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாதது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், “1975ல் அவர் தான் ஏ.வி.எம் சார்ன்னு கமல் தான் எனக்கு சொன்னாரு.. ஒரு ஹீரோவோட ஃபேன்ஸ் என்ன விரும்புறாங்கன்னு அவருக்கு நல்லா தெரியும். தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அதிகமான உதவிகளைச் செய்திருக்கிறார். ஏவிஎம் அலுவலகத்திற்கு சென்றாலே ஒரு பாசிட்டிவிட்டி வந்துவிடும்.. அவ்ளோ Clean-ஆ இருக்கும்.. அலுவலகத்திலேயே உட்கார்ந்துகொண்டு எல்லா படங்களையும் வெற்றி பெற வைப்பார். வருடத்துக்கு ஒரு படம் பண்ணுங்கனு சரவணன் சொன்னதை இன்று வரை கடைபிடிக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாதது.. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த விழாவிற்கு வந்துள்ளார்.. மரியாதைக்குரிய முதலமைச்சர் அன்பும், பண்பும், உயர்ந்த உள்ளமும் கொண்டவர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த சிவாஜி படத்தை கலைஞர் சார் பார்த்தது மட்டுமில்லாமல், வெற்றிவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கேடயம் வழங்கினார்” என்றார்.


