ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினிகாந்த்

 
rajinikanth

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாட்டு வருகிறது.  நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பறிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு ரசிகர்கள் ஏராளமானோர் நடிகர் ரஜினிகாந்தை காண காத்திருந்தனர். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.