கண்டக்டராக பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட்

பெங்களூருவில் உள்ள போக்குவரத்து கழகத்தின் டிப்போவுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்த வெளியான திரைப்படம் ட்ரெய்லர் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்தது. இருப்பினும் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் தனது ஆன்மீக யாத்திரையை தொடங்கி விட்டார். இமயமலை , தயானந்த சரஸ்வதி ஆசிரமம் , உ.பி., உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்ட அவர், சமீபத்தில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடத்துனராக பணியாற்றிய, பெங்களூரு ஜெயநகரா போக்குவரத்து கழகத்திற்கு திடீரென சென்று அங்குள்ளவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அத்துடன் அங்கு பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார் . இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.