சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை - இளையராஜாவுக்கு ரஜினிகாந்து வாழ்த்து

லண்டனில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி இன்று லண்டனில் அரங்கேறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பலர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) March 8, 2025
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள். #IncredibleIlaiyaraaja @ilaiyaraaja @Onemercuri @LiveNationUK
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.