ராமோஜிராவ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!!

 
rr

 ராமோஜிராவ் மறைவுக்கு நடிகர்  ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

 ஈடிவி நெட்வொர்க் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் தலைவரான ராமோஜி ராவ், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.  அவருக்கு வயது 87. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் ஜூன் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் இன்று அவர் உயிர் பிரிந்தது. 


இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில், எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.