மன்மோகன் சிங் அற்புதமான மனிதர் - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

 
rajini

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அற்புதமான மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் என கூறினார்.