ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை கொடுத்து தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி

 
போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்

போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்துக்களை பகிறந்தார். 

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு மழையில் நனைந்தபடி தனது இல்லத்தின் முன் காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்.  அப்போது அவரது வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில்  "தலைவா... தலைவா...என் தெய்வமே... என் ராஜாவே.." என முழக்கமிட்டனர். இல்லத்தின் முன் காத்திருந்த ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னார் நடிகர் ரஜினிகாந்த்.